அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மாலத்தீவு பயணம்! சமூக வலைதளங்களில் சலசலப்பு!
மாலத்தீவில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாலத்தீவில் நாமல் ராஜபக்ஷ விமான போர்டிங் மற்றும் ஜெட் ஸ்கீயில் காணப்பட்டுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையிலேயே இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் மாலத்தீவு ஜனாதிபதி கலந்து கொண்ட விளையாட்டு விருது வழங்கும் விழாவில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

இதேவேளை, நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நேரத்தில் மாலத்தீவுக்குச் சென்ற அமைச்சர் குறித்து சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியிலும் நீங்கள் மாலத்தீவுக்கு சென்றது சரியாத என சர்வதேச பத்திரிக்கை ஒன்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த நாமல்,
அது சரியான முடிவுதான் என கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,
“மாலத்தீவு விளையாட்டு அமைச்சர் நடத்தும் மாலத்தீவு தேசிய விளையாட்டு விருதுகளுக்காக ஒரு நாள் மாலத்தீவிற்கு வருகை விஜயம் மேற்கொண்டுள்ளேன்.
மாலத்தீவு இலங்கையின் நெருங்கிய நண்பர் என்பதாலும், விளையாட்டு மற்றும் இளைஞர்களில் எங்களுக்கு நல்ல புரிதல் இருப்பதாலும், கடந்த ஒன்றரை வருடங்களில் பல பரிமாற்றங்கள் நடந்துள்ளதாலும், எதிர்காலத்தில் இன்னும் பல பரிமாற்றங்கள் நடைபெறவுள்ளதாலும் இந்த விஜயம் முக்கியமானது,” என்றார்.

மேலும் இந்த பயணத்தால் இலங்கை அரசுக்கு எந்த செலவும் இல்லை என்று நாமல் கூறினார்.
“மறைந்து கொண்டு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது. நாமும் மக்களிடம் சென்று இலங்கையின் பாதுகாப்பான சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
மாலத்தீவுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது மற்றும் விளையாட்டு சுற்றுலா என்பது நாம் தீவிரமாகப் பார்க்கிறோம். மாலத்தீவில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு இளைஞர்களுக்கு மாலத்தீவுகள் நிறைய வாய்ப்புகளை வழங்குகின்றன, ”என்று அமைச்சர் நாமல் இதன்போது கூறினார்.
நாம் நாட்டில் தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ வேண்டுமென்றால் உலக நாடுகளின் உதவியை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும் என அமைச்சர் நாமல் தெரிவித்துள்ளார்.