பீற்றர் இளஞ்செழியன் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து மத்தியகுழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், இளைஞர் அணி இணைப் பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியனை கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக, கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் ஊடகம் ஒன்றிடம் உறுதி செய்தார்.
முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வழக்கு ஒன்றை சந்தித்து வருவதால், நீதிமன்ற வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை, பீற்றர் இளஞ்செழியனை கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக பதில் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் அண்மையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
பீற்றர் இளஞ்செழியன் மற்றும் கிழக்கை சேர்ந்த பிரதேசசபை தவிசாளர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக, மத்தியகுழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.