கனடா பாடசாலை துப்பாக்கிச் சூடு சம்பவம்; இலங்கை இரங்கல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அந்தநாட்டு அரசாங்கத்திற்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பாடசாலையில் நடத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிச் சூடுகளில் சந்தேகநபர் உட்பட 10 பேர் உயிரிழந்துடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலைக்குள் நுழைந்து குறித்த பெண் நடத்திய துப்பாக்கிசூட்டில் 7பேர் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்த மேலும் இருவரின் சடலங்கள் பாடசாலைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Deeply saddened by the tragic shooting at a school in British Columbia, Canada. On behalf of the Government and people of Sri Lanka, I extend my heartfelt condolences to the families who have lost their loved ones and wish a speedy recovery to those injured.
— Vijitha Herath (@HMVijithaHerath) February 11, 2026
Our thoughts and…
அதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்திய, 18 வயதுடைய பெண்ணும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.