போராடி தோற்ற இலங்கை அணி: சதம் விளாசி ஜோஸ் பட்லர் அசத்தல்!
ரி20 உலகக் கிண்ணபோட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ரி20 உலகக் கிண்ணபோட்டியின் இன்றைய ஆட்டம் (01) திங்கட்கிழமை ஷார்ஜாவில் இடம்பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி மற்றும் இங்கிலாந்து அணி மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடங்க ஆட்டக்காரர்களாக ராய் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர்.
மேலும் ஜேசன் ராய் வனிந்து ஹசரங்காவின் சுழலில் இரண்டாவது ஒவரிலேயே சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய டேவிட் மலான் 6 ஒட்டங்களுக்கு துஷ்மந்த சமீரா பந்து வீச்சில்யில் ஆட்டமிழக்க இதனையடுத்து களமிறங்கிய ஜோனி பேர்ஸ்டோ ஓட்டங்கள் எதும் எடுக்கமால் ஹசரங்காவின் பந்து வீச்சில்யில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தலைவர் இயோன் மோர்கன் மற்றும் தொட்ட ஆட்டக்காராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் நிதனமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
இயோன் மோர்கன் 40 ஓட்டங்கள் எடுத்த போது ஹசரங்கா வீசிய 4வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதேவேளை தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் கடைசி வரையில் நின்று 101 ஓட்டங்களை பெற்றார்.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் இங்கிலாந்து அணி 163 ஓட்டங்களை எடுத்தது. அதிகப்பட்டமாக ஜோஸ் பட்லர் 67 பந்துகளில் 101 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி சார்பில் வலிந்து ஹசரங்கா 4 ஒவர்களை வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
மேலும் 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்குடன் களமிறங்கிய இலங்கையின் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான பத்தும் நிசங்க மற்றும் குசால் பெரேரா களமிறங்கினர். பத்தும் நிசங்க இங்கிலாந்து அணி வீசிய முதல் ஒவரில் 1 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா மற்றும் குசால் பெரேரா கூட்டணியாக விளையாடி வந்தனர். பின்னர் எடில் ரசீத் வீசிய முதல் ஒவரில் சரித் அசலங்கா 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிந்தார். இதேவேளை ரசீத் வீசிய அடுத்த ஓவரில் குசல் பெரேரா 7 ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் பானுக்க ராசபக்ச ஷ இருவரும் கூட்டணியாக இணைந்து அணியின் எண்ணிக்கையை சிறிய அளவு உயர்த்தினர். இலங்கை அணியின் எண்ணிக்கை 57- காக இருக்கும் போது கிரிஸ் ஜோர்டன் வீசிய பந்தில் அவிஷ்கா பெர்னாண்டோ 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனையடுத்து களமிறங்கிய தசுன் சானக்க மற்றும் வலிந்து ஹசரங்கா இருவரும் கூட்டணியாக இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த தொடங்கினர். இருவரும் அபாரமாக ஆடி வந்த நிலையில் ஹசரங்கா 34 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் லிவ்விங்ஸ்டன் பந்து வீச்சில்யில் ஆட்டமிழக்க அடுத்த ஒவரில் தலைவர் தசுன் சானக்க ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 19 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.