உலகளவில் தற்கொலை செய்துகொள்ளும் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்! அதிர்ச்சி தகவல்
உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் இலங்கை முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 1996-1997 ஆம் ஆண்டுகளில் உலகில் அதிகளவான தற்கொலைகள் இடம்பெற்ற நாடாக இலங்கை இருந்ததாகவும், தற்போது நிலைமை மேம்பட்டுள்ள போதிலும், நாடு இன்னமும் திருப்திகரமான நிலையில் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தற்கொலையை தூண்டும் காரணிகள் பல இருப்பதாகவும், அந்த சூழ்நிலைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஏனைய துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த நிலைமையை மேம்படுத்த சுகாதார அமைச்சு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.