இலங்கையின் குடும்ப நுகர்வுச் செலவுகள் 9 இலட்சம் கோடி ரூபா!
இலங்கையில் 2020 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 4 இலட்சம் குடும்பங்கள் குறைந்த வருமானப் பிரிவுகளுக்குச் சென்றுள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அதன்படி இலங்கையின் குடும்ப நுகர்வுச் செலவுகள் 2025 ஆம் ஆண்டில் 9 இலட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அந்த தகவல்கள் ஊடாக தெரியவந்துள்ளது .

எனினும், உணவு, வீடமைப்பு மற்றும் சுகாதாரத்திற்கான செலவுகள் மொத்தச் செலவில் 58 சதவீதமாக அதிகரித்துள்ளன. நாட்டின் நுகர்வுச் செலவில் 70 சதவீதத்தை நடுத்தர வருமானக் குடும்பங்கள் மேற்கொள்கின்றன.
இதேவேளை, வசதி படைத்த குடும்பங்கள் மேல் மாகாணத்தில் அதிகளவில் வசிப்பதாகவும், நடுத்தர வருமானக் குடும்பங்களில் 56 சதவீதமானவை கிராமப்புறங்களில் உள்ளதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.