இலங்கையில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு; காரணம் என்ன தெரியுமா?
இலங்கையில் விரைவுணவு விலைகளின் அதிகரிப்பால் நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
காரணம்
அத்தோடு பெரியவர்களும் குழந்தைகளும் விரைவுணவின் விலை உயர்வின் காரணமாக விரைவுணவு வாங்குவதைத் தவிர்த்துள்ளதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவு 105 கிராமப்புற சேவை அலுவலர் பிரிவுகளுடன் இணைந்து இந்தக் கணக்கெடுப்பை நடத்தியது.
குறிப்பாக குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், கல்லீரலில் கொழுப்பு சேர்வது போன்ற நோய்கள் வெகுவாக குறைந்துள்ளதையும் இந்தக் கணிப்பு உறுதி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.