அரசாங்கத்தில் இருந்து விமல், கம்மன்பிலவை வெளியில் விடாதீர்கள்! அமைச்சர் திலும்
விமல் வீரவன்ச (Wimal Weerawansa) மற்றும் உதய கம்மன்பில (udaya gammanpila) ஆகிய இருவரையும் அரசாங்கத்தில் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை மட்டும் கருதி, சில தரப்புகளால் முன்வைக்கப்படும் யோசனைகளை எல்லாம் ஏற்றுச் செயற்பட முடியாது.
ஶ்ரீலங்கா சுதந்தரக் கட்சி அரசியலில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் வெளியேறட்டும். அதனை நாம் தடுக்கவில்லை.
ஆனால், விமல், கம்மன்பில போன்றவர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) வழமைபோல் தனது வேலையை விமல், கம்மன்பில போன்றவர்களுக்கும் காண்பித்துவிட்டார்.