நாட்டு மக்களுக்கு எதுவுமே செய்யாத அரசு வரி அதிகரிப்பு பற்றி பேசுகிறது! ஹர்சா டி
நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையிலேயே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) மற்றும் மத்தியவங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) உள்ளிட்ட தரப்பினர் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா (Harsha de Silva) சபையில் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (24-03-2022) சபையில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு பொறுப்பு பொறுப்புக்கூற யாரும் இல்லை. வரி அதிகரிப்பு தொடர்பாக இன்று விவாதம் நடைபெறுகிறது.
ஆனால் நிதியமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் இங்கு இல்லை.
பயனுள்ள வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை ஆனால் வரி அதிகரிப்பு பற்றி பேசுகிறது என்றார்.