அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்! வெளியான அறிவிப்பு
சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska) பொது அழைப்பை விடுத்துள்ள நிலையில் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சியினர் கட்சியில் இணைந்து கொள்ளாவிட்டால் வழமை போன்று அரசாங்கத்தை தொடர்வதற்கு ஜனாதிபதியும் ஆளும் தரப்பும் தீர்மானித்துள்ளனர்.
இந்த தீர்மானத்தை இன்றைய தினம் (04-04-2022) எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனைத்து கட்சிகளையும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை கட்சிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் வழமை போன்று அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது என ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் பெரும்பான்மை பலத்தை நிருக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எந்த தரப்பினராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் வழமை போன்று ஆட்சியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.