அரசுக்கு எதிராக 300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!
இலங்கையில் கோட்டாபய (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தை பதவி விலகக் கோரி ஒரு வாரத்துக்கு ஹர்த்தல் அனுஷ்டிக்கப்படும் என்று 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை மறுதினம் புதன்கிழமை (20-04-2022) முதல் ஆரம்பமாகும் ஹர்த்தால் எதிர்வரும் 28-04-2022 ஆம் திகதி வரை நீடிக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து போராட்டங்களை நடத்துவர் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றிய தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) தெரிவித்துள்ளார்.
இதேசமயம், காலிமுகத்திடலில் இன்று 10ஆவது நாளாகவும் பெருந்திரளானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகவே நீண்ட ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.