காலிமுகத்திடலில் அதிரடி காட்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள்! வானில் ஒளிரும் GotaGoHome!
இலங்கையில் தற்போது இருக்கும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) ஆர்ப்பாட்டக்கார்களால் ஜனாதிபதி செயலகம் முன்னால் கோ கோம் கோட்டா என்றவாறாக ஒளிக்கற்றைகள் ஜனாதிபதி செயலக முகப்பில் ஒளிரும்படியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.
எனினும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், 2005 ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவின் சிட்னியில்” Beware of the God ” என்ற ஒளிரவிடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமே அது என கூறப்படுகின்றது.
மேலும் கோட்டா கோ கமவில் அவ்வாறான ஒளிக்கற்றைகள் எதுவும் ஒளிரவிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.