இலங்கையில் நாளைய தின மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கை முழுவதும் நாளைய தினமும் சுழற்சி முறையில் மின் வெட்டு அமுலாக்கப்பட இருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின் துண்டிப்பு தொடர்பில்,
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேரமும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 5.30 வரை 3 மணி நேரமும் மாலை 5.30 முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.