ஜனாதிபதி தேர்தலில் விதிக்கப்பட்டுள்ள தடை
தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச செலவில் விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரச செலவில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய தேர்தல் அல்லாத உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு விமானங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நபர்கள் அரசாங்க விமானங்களைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகளை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தினால் அதற்கும் பணம் செலுத்தி ரசீதுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அரசாங்க சொத்துக்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.