புதிய அரசாங்கத்திடம் கரு ஜெயசூரிய வலியுறுத்தல்!
இலங்கை மீண்டும் ஒரு கெளரவமான ஜனநாயக நாடாக மாற வேண்டுமானால், 20A சட்டத்தை விரைவில் நீக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய (Karu Jayasuriya) தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் எந்த தாமதமும் இன்றி செயல்பட வேண்டும், ஏனெனில் நெருக்கடி காலங்களில் பிரச்சனைகள் மிக விரைவாக உருவாகின்றன.
வெறும் பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்தினால் கூட, அதே முட்டாள்தனமான ஆளுமையின் கீழ் இலங்கை மீண்டும் இரையாகாமல் தடுக்கமுடியாது என கரு ஜெயசூரிய டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
For Sri Lanka to become a decent democracy again, 20A must be removed asap. The new gov must act with no delay, as things evolve so quickly during times of crisis. Mere economic focus will not prevent Sri Lanka from falling prey to the same idiosyncratic decision making again.
— Karu Jayasuriya (@KaruOnline) May 18, 2022