ஈஸ்டர் தாக்குதல் : கைதான சந்தேக நபர் உயிரிழப்பு!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவ்வாறு உயிரிழந்த நபர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொரளை பொலிஸார் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அறிவித்தனர்.
உயிரிழந்த நபர் சுகயீனம் காரணமாக கடந்த வருடம் நவம்பர் 23-11-2021 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டினார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.