உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்காத இலங்கை! இந்தியா சீனாவை பின்பற்றுகின்றதா?
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 141 நாடுகள் ஆதரித்தன.
எனினும் , இலங்கை அதில் வாக்களிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதேவேளை அந்த வாக்கெடுப்பில் இந்தியா மற்றும் சீனாவும் கலந்துகொள்ளவில்லை.
உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, சீனா , பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை போக்கை கடைபிடித்தன.
அதேசமயம் ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா, எரித்திரியா ஆகியன மேற்படி பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
எனினும் 141 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. ரஷ்யா “உடனடியாக, முழுமையாக மற்றும் நிபந்தனையின்றி அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும்” என்று அத் தீர்மானம் கோருகிறது.
ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலில் உகரைன் பெரும் இழப்புக்களை சந்தித்துவரும் நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்க்கிரமிப்பானது ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நினைவுபடுத்துவதாக பலரும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.