இலங்கை நெருக்கடி: அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இந்திய அரசு!
இலங்கை நெருக்கடி குறித்து இந்திய அரசு செவ்வாய்க்கிழமை (19-07-2022) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) மற்றும் எஸ் ஜெய்சங்கர் ( S Jaishankar) ஆகியோர் விளக்கமளிப்பார்கள் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி (Pralhad Joshi ) கூறியதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்ட கட்சிகளின் கூட்டத்தில், நலிவடைந்து வரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்டை நாட்டில் இந்தியா தலையிட வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடந்த சந்திப்பின் போது, திமுக மற்றும் அதிமுக இரண்டும் இலங்கைப் பிரச்சினையை, குறிப்பாக நாட்டின் தமிழ் மக்களின் நிலை குறித்து குரல் எழுப்பியுள்ளனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க., கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
கட்சியின் தலைவர் டி.ஆர். பாலு இலங்கையின் நிலைமையை நிவர்த்தி செய்வதில் இந்தியா தலையிட வேண்டும் என்றும் கோரினார்.