நாட்டு மக்கள் சுகாதார விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கவும்!
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாட்டில் உள்ளபோதும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் தொடர வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் அனில் ஜசிங்க (Anil Jasinghe) தெரிவித்துள்ளார்.
இன்று (05-01-2022) சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கொரோனா பரவலைத் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கும்போதே சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக சுகாதார அதிகாரி ஒருவரின் சேவையைப் பெறுமாறு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
நியூயோர்க் நகரில் நோயாளிகள் இன்னும் பதிவாகி வருகின்றனர். பிரித்தானியாவில் தினமும் சுமார் ஒரு இலட்சம் நோயாளிகள் பதிவாகின்றது. அதேசமயம், ஒமிக்ரான் வைரஸ் இந்த நாட்களில் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இருப்பினும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியிருந்தாலும் இறப்பு வீதம் குறைந்து வருகின்றது.
இந்நிலையில், தனிப்பட்ட இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு, முகக்கவசங்களை அணிவது மற்றும் கைகளை சுத்தம் செய்வது ஆகியவை கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு தந்திரமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் அனில் ஜசிங்க (Anil Jasinghe) தெரிவித்துள்ளார்.