இலங்கையில் சற்றுமுன் கோர விபத்து ; 10 பேர் பலி ; தெடர்ந்து உயரும் பலி எண்ணிக்ககை
Update : எல்ல-வெல்லவாய சாலையில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து நேற்று (4) இரவு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்ல - வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 500 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தங்காலையில் இருந்து எல்லவிற்கு சுற்றுலா குழுவொன்று மீண்டும் தங்காலையில் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.