இலங்கை நிதியமைச்சரிடம் அமெரிக்க தூதுவர் தெரிவித்த விடயம் என்ன?
இலங்கை அயல் நாடுகளுடனான உறவை சிறந்த முறையில் பேணுவதுடன், இலங்கையின் பொருளாதாரம் சுபீட்சமானதாக அமைய வேண்டும் என்பது அமெரிக்காவின் தேவைப்பாடாகும் என இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் (Basil Rajapaksa) குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சில் இன்று வியாழக்கிழமை (03-03-2022) நிதியமைச்சருக்கும், அமெரிக்க தூதுவருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார சவால்கள், பொருளாதார மீட்சிக்கான ஒத்துழைப்புக்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அயல் நாடுகளுடனான உறவை சிறந்த முறையில் பேணுவதுடன்,பொருளாதாரம் சுபீட்சமானதாக அமைவது அமெரிக்காவின் தேவைப்பாடாகும்.

அதனை கருத்திற்கொண்டு அமெரிக்கா இலங்கைக்கு கொவிட் -19 தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார மீட்சிக்காக 17.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இரு தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்படுவது எமது பிரதான எதிர்பார்ப்பாகும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.