இலங்கையை விட்டு அவசரமாக வெளியேறிய கோட்டாபயவின் உறவினர்! சிசிரிவி புகைப்படம்
இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினருமான நிரூபமா ராஜபக்ஷ (nirupama rajapaksa) நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பான சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகின்றன.
இலங்கையின் தற்போதைய நெருக்கடியான நிலையில் பல முக்கியஸ்தர்கள் பதவி விலகுவதும், நாட்டை விட்டு வெளியேறுவதும் தொடர்பான செய்திகள் சில நாட்களாக வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான நிரூபமா ராஜபக்ஷ நேற்று இரவு நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவான காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான தகவல்களுக்கு...
நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபயவின் நெருங்கிய உறவினர்!