இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம் : இவ்வாண்டில் 4 கிரகணங்கள்
2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்களும் ஒரு சூரிய கிரகணமும் தென்படும் என ஆதர்சி கிளார்க் மையத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியருமான சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
மூன்று சந்திர கிரகணங்களில் இரண்டு சந்திர கிரகணங்கள் முழு சந்திர கிரகணங்களாக தென்படும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை (13) மற்றும் வெள்ளிக்கிழமை (14) ஆகிய இரு திகதிகளில் நிகழவுள்ள முழு சந்திர கிரகணங்கள் இலங்கையில் தென்படாது.
மேலும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதியில் நிகழவுள்ள முழு சந்திர கிரகணம் இலங்கையில் தென்படும் எனவும், சூரிய கிரகணம் நிகழவுள்ள திகதி குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.