குடி மகன்கள் போல் போதையில் தள்ளாடும் அணில்! இணையத்தில் வைரலாகும் காணொளி
இணையத்தில் தற்போது போதையினால் தள்ளாடும் அணிலின் காணொளி ஒன்று வைரலாக பரவி வருகின்றது.
சமூக வலைதளங்களில் எண்ணிலடங்கா காணொளிகள் அனுதினமும் பகிரப்படுகின்றன. இவை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக வலைத்தளங்களில் பல வித வினோத காணொளிகள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அந்த வகையில் தற்போது போதையினால் தள்ளாடும் அணிலின் காணொளி ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
சரக்கடித்த பின் ‘குடி’ மகன்கள் போதையின் தள்ளாடுவதைப் பார்த்திருப்பீர்கள். மனிதர்கள் மட்டும் தான் போதையில் தள்ளாடுவார்களா என்ன… விலங்களுக்கும் போதை ஏற்படும்.
இங்கே நாம் காணும் அணில் புளித்த பேரிக்காயை சாப்பிட்ட பின் தள்லாடுவதைக் காணலாம்.
டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த காணொளியில், புளிக்கவைக்கப்பட்ட சில பேரிக்காய்களை அணில் சாப்பிடுவதைக் காணலாம்.
புளித்த பேரிக்காய்களை சாப்பிட்ட பிறகு, அணில் தனது காலில் நிற்க முடியாமல் தள்ளாடுவதையும் சாய்வதையும் காணலாம்.
Squirrel eats fermented pears and gets drunk!
— Figen (@TheFigen) July 27, 2022
Awwwwww ❤️??pic.twitter.com/TRC7SSkRa4
“Figen” என்ற பயனரால் பகிரப்பட்ட வீடியோவில், “அணில் புளித்த பேரிக்காய் சாப்பிட்டு தள்ளாடுவதைப் பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொளி பதிவிட்டப்பட்ட 24 மணித்தியாலத்திற்குள் 662k பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.