வசந்தகால விழாவால் உல்லாச பயணிகளின் வருகை அதிகரிப்பு!
நுவரெலியாவில் வசந்தகால விழா ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நுவரெலியா வசந்தகால விழாவை முன்னிட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக நடைபெறாத ஏப்பிரல் வசந்தகாலத்தை இம்முறை சிறப்பாக கொண்டாட நுவரெலியா மாநகர சபை அதற்கான ஒழுங்குகளை செய்து வருகிறது.
சுற்றுலா பயணிகளின் வருகை
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக நுவரெலியா மாநகரத்திற்கு இயற்கை அழகை இரசிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக அதிகரித்து வருகிறதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் நேற்று முன்தினம் நுவரெலியா நகரில் சிவப்பு கொடியொன்றை ஏந்தியவாறு வெளிநாட்டு உல்லாச பயணி ஒருவர் முன்நோக்கி செல்ல அவரை பின் தொடர்ந்து சக வெளிநாட்டு பயணிகளும் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.