தேசிய பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் தரம் ஒன்றிலிருந்து ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (19-03-2023) கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) இதனை தெரிவித்துள்ளார்.
தரம் 6–9 மற்றும் 10–13 வகுப்புகளில் இருந்து அனைத்து பாடத்திட்டங்களையும் சர்வதேச நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறையில் புதிய இலக்கை அடைவதற்கு இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.