வெள்ளிக்கிழமைகளில் இதனை செய்தால் கூரை வீட்டில் வாழ்பவர்களும் குபேரர்கள் ஆகலாம்!
வீடு சுபிட்சமாக இருக்க பண வரவு தடை இல்லாமல் மங்கள நிகழ்வுகள் இனிதே நடக்க வேண்டும் என நினைத்தால் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண ஆசீர்வாதமும் அனுகிரகமும் நமக்கு வேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் எளிய வழிபாடு
மகாலட்சுமி தாயாரின் ஆசீர்வாதத்தையும் அனுகிரகத்தையும் பெற வெள்ளிக்கிழமைகளில் இந்த எளிய வழிபாட்டு முறையை நாம் கடைப்பிடிக்கவேண்டும்.
இந்த வழிபாட்டு முறையை வெள்ளிக்கிழமை அன்று தான் தொடங்க வேண்டும்.
அதே போல் இந்த வழிபாட்டிற்கு மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது விக்ரகம் இரண்டில் ஏதேனும் ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும்.
வழிபாட்டு முறை
வெள்ளிக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்த பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் மஞ்சள், சந்தனம், பச்சைக் கற்பூரம் மூன்றையும் ஒன்றாக குழைத்து மகாலட்சுமி தாயாருக்கு பொட்டு வைத்த பின் குங்குமம் பொட்டும் வைத்து விடுங்கள்.
அதன் பிறகு நல்ல மணம் மிக்க மலர்களை சாற்றிய பிறகு துளசி இலைகளையும் வைக்கலாம் அல்லது அதிகமாக இருந்தால் மாலையாக போட போது தொடுத்து போடலாம்.
உங்கள் வீட்டில் துளசி இல்லை என்றால் முதல் நாளே கடையில் வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
சர்க்கரைப் பொங்கல்
அடுத்ததாக நெய்வேத்தியத்திற்கு சர்க்கரை பொங்கல் செய்ய வேண்டும். சர்க்கரை பொங்கல் செய்யும் போது அதிலும் கொஞ்சம் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து செய்து அதை மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.
இவையெல்லாம் தயார் செய்த பின்பு தாயாரின் படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தீபத்தை ஏற்றி வைத்த பிறகு துளசி இலைகளை கொண்டு அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
அந்த நேரத்தில் மகாலட்சுமி அஷ்டோத்திரம், மகாலட்சுமி தாயாரின் போற்றிகள் இவைகளை படிக்கலாம். இதை எல்லாம் செய்த பிறகு நீங்கள் ஏற்றும் கற்பூர தீபாராதனையில் பச்சைக் கற்பூரம் சேர்த்து ஏற்றி தாயாருக்கு காட்டி அன்றைய பூஜை முடித்துக் கொள்ளுங்கள்.
48 நாட்கள் அல்லது 16 நாட்கள்
48 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்யலாம். அப்படி முடியாதவர்கள் 16 வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்யலாம். 16 வெள்ளிக்கிழமையில் தவறாமல் சக்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து கொள்ளுங்கள்.
ஒரு வேளை நீங்கள் 48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்யும் பொழுது வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்யலாம். மற்ற நாட்களில் ஒரு கட்டி வெல்லத்தை வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள்.
பூஜையை ஆரம்பித்த உடனே உங்கள் வீட்டில் இருக்கும் சூழ்நிலைகள் மாறி நல்ல முறையில் பணவரவுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் அதற்கான முயற்சிகளை எடுக்கும் போது நிச்சயமாக அதில் வெற்றியை காண்பீர்கள் .
உங்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான அனுகிரத்தை மகாலட்சுமி அருளுவார் என்ற நம்பிக்கையோடு பூஜையை செய்து அதற்கான பலனை பெறலாம்.