நாடாளுமன்றத்தில் களவுபோகும் உணவுகள்!
நாடாளுமன்ற உணவகப் பிரிவில் இறைச்சி, மீன், முட்டை மற்றும் கறுவாடு போன்ற உணவுகள் வெளியில் எடுத்துச் செல்லப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு உணவு பொருட்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுவதால், அராசாங்கத்திற்கு வருடாந்தம் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இரகசியமாக எடுத்துச்செல்லும் ஊழியர்கள்
இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளமை காரணமாக சில ஊழியர்கள் அவற்றை தினமும் இரகசியமாக வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் இது சம்பந்தமாக நாடாளுமன்ற பிரதானிகளுக்கு ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளனர். அண்மைய தினங்களில் வேக வைக்கப்பட்ட முட்டைகள் அதிகளவில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாது சமைத்த உணவுகளுக்கு மேலதிகமாக உலர் உணவு பொருட்களும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.