நாளை முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
இலங்கையில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை நடவடிக்கை காரணமாக நாளை (28-01-2023) முதல் காலி முகத்துவாரம் மற்றும் கொழும்பில் உள்ள பல வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விசேட போக்குவரத்து திட்டம் நாளை (28-01-2023), நாளை மறுதினம் (29-01-2023) மற்றும் பெப்ரவரி 1, 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.