விசேட பாதுக்காப்புடன் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிரமுகர்!
விசேட பாதுகாப்புடன் ஹெலிகொப்டரில் பிரமுகர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று (28-10-2022) காலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசேட பிரமுகர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நோயாளர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு அப்பால் எவ்வித பதிவுகளையும் குறிப்புகளையும் வைத்திருக்காமல் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்களை நாடாமல் வேறு வேறு விசேட வைத்தியர்கள் குழுவொன்று பல்வேறு வைத்தியசாலைகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசேட பிரமுகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் வைத்தியசாலை வளாகத்தில் பாதுகாப்பு அதிகாரிகளை வைத்து விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஷேட வி.ஐ.பி தொடர்பான தகவல்களை இலங்கையில் உள்ள ஒரு பத்திரிகை செய்தி பிரிவு ஆராய்ந்தபோது, அவர் முன்னாள் கடற்படைத் தளபதியே இவ்வாறு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.