பாதைகளில் யானை விபத்துக்களை தடுக்க விசேட நடவடிக்கை
இரவு நேர சேவை தொடருந்துகளில் காட்டு யானைகள் மோதுவதைத் தடுக்க விசேட தொடருந்து நேர அட்டவணையை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு பாதையில் பளுகஸ்வெவ முதல் ஹிங்குராக்கொட வரையிலும், வெலிகந்த முதல் புனானி வரையிலும், திருகோணமலை பாதையில் கல்ஓயா சந்தி முதல் கந்தளாய் வரையிலும் உள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் தொடருந்து நேர அட்டவணைகள் திருத்தப்பட்டு, மார்ச் 7 ஆம் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மீனகயா
அதே நேரத்தில், குறித்த திகதியிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இயங்கும் "மீனகயா" இன்டர்சிட்டி இரவுநேர தபால் தொடருந்துக்கு S-13 வகை பவர் செட்டைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி ரயில் புறப்படும் நேரங்கள் திருத்தப்பட்டதாலும், வேக வரம்புகள் விதிக்கப்பட்டதாலும் பயணிகள் ரயில் நிலையங்களுக்கு நேரத்திற்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.