சாதாரண தர விஞ்ஞான வினாத்தாள் தொடர்பில் வெளியான விசேட செய்தி
விஞ்ஞான பாடத்திற்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் மேலதிகமாக 8 புள்ளிகள் கிடைக்கும் என கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு விஞ்ஞான வினாத்தாளானது பாடத்திட்டத்தைக் கடந்து, கேள்வி முறையில் மாற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக, விஞ்ஞான பாடத்திற்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் மேலதிகமாக 8 புள்ளிகள் கிடைக்கும்.
அந்ததந்த பெறுபேறுகளுக்கான மதிப்பெண்கள் 10 புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளன, மேலும் 65 புள்ளிகளுக்கு மேல் பெறும் அனைவருக்கும் திறமைச் சித்தி வழங்கப்படும்.
எனவே, மேற்கண்டவாறு போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அத்தகைய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.