இலங்கையில் நாளை இடம்பெற்றவுள்ள விசேட கூட்டம்.!
இலங்கையில் விசேட கூட்டம் ஒன்று நாளை (04-04-2022) இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் ஒன்றே இடம்பெறவுள்ளது.
இவ்வாறு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் பின்னணியில் உள்ள காரணம் மற்றும் அதனூடாக வெளிப்படுத்தப்படும் விடயம் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிரிஹானயில் இருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska) இல்லத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட சம்பவம் அடுத்து நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட 20 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு மேலும் 29 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.