அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
அமெரிக்காவினால் புதிதாக விதிக்கப்பட்ட வரி முறைமை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த வரி விதிப்பின்போது நாடு என்ற வகையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த விடயத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமான நிவாரணங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்துடன் விரைவில் கலந்துரையாடல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் வகையில் 10 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதியானால் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.