கண்டிக்கு இந்த திகதிகளில் விசேட பேருந்து சேவை!
கண்டி தலதா மாளிகை பெரஹெரவை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதியில் இருந்து 19ஆம் திகதி வரை இந்த விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டியை உள்ளடக்கிய வகையில் இந்த பேருந்து சேவைகள் இரவு மற்றும் பகல் வேளைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.
கண்டி முழுவதும் மேலதிகமாக 438 பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
மேலும், கொழும்பு, கேகாலை, நாவலப்பிட்டி, கம்பளை, கம்பஹா, அநுராதபுரம், பொலனறுவை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் இருந்தும் மேலதிக 100 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.