புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவை
எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பஸ் சேவையை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனபடி கொழும்பு, பெஸ்ட்டியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்துக்கு மேலதிகமாக கடவத்தை, கடுவலை மற்றும் மாக்கும்புர உள்ளிட்ட நிலையங்களில் இருந்தும் இந்த விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவையானளவு எரிபொருள் கிடைக்கப்பெறாவிட்டால், புத்தாண்டு பஸ் சேவையினை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அதேசமயம் சித்திரை புத்தாண்டு காலத்தில் ரயில் சேவைகள் இடம்பெறாது என வெளியாகியுள்ளதாக தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதியில் அதிகளவான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.