போக்குவரத்து தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!
கண்டி மற்றும் குருணாகல் ஆகிய நகரங்களிலிருந்து கொழும்புக்கு வேலை நிமித்தமாகப் பயணிப்பவர்கள் தொடருந்து பருவ சீட்டுகளை பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாற்று ஏற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை ( 08) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

கண்டி மற்றும் குருணாகல் பகுதிகளிலிருந்து கொழும்புக்கு செல்லும் பயணிகள் ரம்புக்கணை தொடருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பேருந்தில் பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை ரம்புக்கனையிலிருந்து புறப்படும் பேருந்துகள்:
காலை 5:30, காலை 5:45 மற்றும் காலை 6:00 மாலை ரம்புக்கனைக்கு வரும் பேருந்துகள்
மாலை 7:45, இரவு 8:15 மற்றும் இரவு 9:00