பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
2025 ஆம் கல்வியாண்டுக்காக தேசிய பல்கலைக்கழங்களில் உள்வாங்குவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் 2025ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதேசமயம் ஒவ்வொரு மாணவரும் தங்கள் விண்ணப்பத்தை ஒன்லைனில் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.