ஏர் கனடா விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
டெல்லியில் இருந்து ரொறன்ரோவிற்கு செல்லும் ஏர் கனடா விமானங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்திருப்பதாக ஏர் கனடா விமான சேவை நிறுவனம் . அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு கனடா சமீபத்தில் தான் இந்தியாவுக்கு செல்ல மற்றும் இந்தியாவில் இருந்து வர நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தது.
ஏர் கனடா விமான சேவை நிறுவனத்தின் இந்த சேவையானது டெல்லி - மொண்ரியலை இணைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொண்ரியலில் வளர்ந்து வரும் இந்திய சமூகத்திற்கு வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை வழங்கவுள்ளதாக ஏர் கனடா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரொறன்ரோவில் இருந்து டெல்லிக்கு விமான சேவையை அக்டோபர் 15 முதல் வாரத்திற்கு 10 விமானங்களாக கூடுதலாக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் இருந்து வான்கூவர் மற்றும் ரொறன்ரோவுக்கு ஏர் இந்தியா நேரடி விமான சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.