மட்டக்களப்பு நோக்கி சென்ற ரயில் விபத்து... வெளியான விசேட அறிவித்தல்!
காட்டு யானைகள் மோதுண்டு தடம் புரண்ட மட்டக்களப்புக்கு எரிபொருள் ஏற்றிச் செல்லும் ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் இணைக்கும் பணி நாளையதினம் (19-10-2024) காலையுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்றையதினம் (18-10-2024) மட்டக்களப்பு - கொழும்பு கோட்டைக்கும் இடையில் இயங்கும் அனைத்து ரயில் பயணங்களும் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் இன்று அதிகாலை யானைக்கூட்டம் ஒன்று மோதியதில் தடம்புரண்டது.
இந்த விபத்து மின்னேரியா மற்றும் ஹிங்குரக்கொட பகுதிக்கு இடையில் ரொட்டவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக 4 எரிபொருள் தாங்கிகள் தடம் புரண்டதுடன், அவற்றில் இரண்டு தலைகீழாக கவிழ்ந்துள்ளன.
குறித்த இடத்திற்கு கண்காணிப்பு விஜயம் செய்த ரயில்வே திணைக்களத்தின் துணைப் பொது மேலாளர் (போக்குவரத்து) என். ஜே. இந்திபொலகே தெரிவிக்கையில்,
எரிபொருள் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் ரயிலை தண்டவாளத்தில் இணைக்கும் பணி ஆரம்பிக்கப்படும் தெரிவித்தார்.