சபையை விட்டு வெளியேற்றுவேன் ; சபாநாயகர் கடும் எச்சரிக்கை...சபையில் அமளிதுமளி
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பாக சபாநாயகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கும் இடையே இன்று சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து , சுஜீவ சேனசிங்கவை சபையை விட்டு வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிரதமரிடம் துணைக்கேள்வி எழுப்ப முற்பட்ட போதே இந்த மோதல் வெடித்தது.

துணைக்கேள்வி எழுப்ப முற்பட்ட போதே மோதல்
நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க , நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 38(7) இன் படி, பிரதமரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்குப் பதிலளிக்கப்பட்டதன் பின்னர், மற்றுமொரு உறுப்பினரின் அனுமதியுடன் மேலதிக துணைக் கேள்விகளை எழுப்ப முடியும் என ஆங்கிலத்தில் வாசித்து சபாநாயகரிடம் வாதிட்டார்.
கழிப்பறைக்கும் கோட்டாவிடம் அனுமதி பெற்றே சுரேஷ் சாலே செல்வார்! ஜால்ரா அடிப்போருக்கு சரத் பொன்சேகா பதிலடி
இதனை ஏற்க மறுத்த சபாநாயகர், இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்க முடியும் எனத் திட்டவட்டமாகக் கூறினார். "பத்து கேள்விகள் வரை கேட்க முடியும் என்று நினைத்துக் கொண்டு இந்த நாடகத்தை ஆட வேண்டாம், அமருங்கள்" என சுஜீவ எம்பியை சபாநாயகர் சாடினார்.
இந்த விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறுக்கீடு செய்து சபாநாயகரின் முடிவுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பினார்.
இந்நிலையில் நீங்கள் இந்தச் சபைக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், உங்களை நான் சபையை விட்டு வெளியேற்றுவேன், என சபாநாயகர், சுஜீவ சேனசிங்கவுக்கு சபையில் கடுமையாக எச்சரித்தார்.
]