நள்ளிரவில் பிள்ளையான் குழுவினரால் தாக்கப்பட்ட தென் இலங்கை இளைஞர்கள்
தேசிய மக்கள் சக்திக்காக மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தென் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்களை, பிள்ளையான் குழுவினரால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் அமைக்கப்பட இருந்த தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு சென்ற பிள்ளையானின் கட்சி உறுப்பினர்கள், சிங்கள இஞைர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.
பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைதாகியிருந்த நிலையில் பின்னர் கோத்தபாயவினால் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே தென்னிலங்கை சிங்கள இளைஞர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிள்ளையான குழு உறுப்பினர் ஒரு சிறைச்சாலை அதிகாரி என்றும் கூறப்படுகின்றது.