வாய்ப்புண் முதல் எடை இழப்பு வரை; இந்த இலை போதும்
சமையல் வசனைக்காக நாம் பயன்படுத்து கறிவேப்பிலை சமையல் பயன்பாடுகளைத் தவிர, பல தோல், தலைமுடி துயரங்களையும் கவனித்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் நமக்கு அதிகரிக்கும் திறண்கொண்டது.
ஒருவரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பான ஒரு பரவலான மூலப்பொருள் கறிவேப்பிலை இலைகள்.
கறிவேப்பிலையில் நார்ச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளது. இது உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை சிக்கல்களையும் நிர்வகிக்க உதவுகின்றன.
முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டியே நரைப்பதற்கான தீர்வு
1-2 கப் தேங்காய் எண்ணெய் / உங்களுக்கு விருப்பமான எண்ணெய்
ஒரு சில கறிவேப்பிலை இலைகள்
தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை இலைகளை போட்டு எண்ணெயின் நிறம் மாறும்வரை கொதிக்கட்டும். இதனை சிறிது சிறிதாக குளிர விடவும். பின்னர் கலவையை ஒரு கண்ணாடி பாட்டிலிற்கு மாற்றவும்.
கூந்தலை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்து வேர் முதல் நுனி வரை கறிவேப்பிலை எண்ணெயைப் பயன்படுத்துங்கள். ஒரு இரவு முழுவதும் இது இருக்கட்டும். அடுத்த நாள், உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பூவுடன் அலசுங்கள்.
பொடுகு மற்றும் தலை பேன்கள்
புளிப்பு மோர் கொண்டு கறிவேப்பிலை இலைகளை ஒரு பேஸ்டாக அரைக்கவும்.
நாம் தயார் செய்த பேஸ்டை உச்சந்தலையில் தடவி, அது காய்ந்து போகும் வரை இருக்கட்டும். பிறகு நன்கு கழுவவும். இடையில் 1-2 நாட்கள் இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை தடவுவது பேன் மற்றும் பொடுகில் இருந்து நிவாரணம் தரும்.
எடை இழப்பு
சுமார் 10-20 கறிவேப்பிலை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு, இலைகளை அகற்றி தேயிலையை வடிகட்டவும். அதன் சுவையை அதிகரிக்க தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். உங்கள் கொழுப்பை எரிக்கும் கறிவேப்பிலை தேநீர் இப்போது தயாராக உள்ளது.
வாய் புண்கள்
தேனுடன் கலந்த கறிவேப்பிலை தூளை வாய் புண் மீது தடவலாம். 2-3 நாட்களில், இது வாய் மற்றும் உதடுகளின் அழற்சியான ஸ்டோமாடிடிஸை நீக்குகிறது.
நீரிழிவு நோய், கொழுப்பு
காலையில் 8-10 ஃபிரஷ் கறிவேப்பிலை இலைகளை முதலில் சாப்பிடலாம், அல்லது இலைகளை ஜூஸ் செய்து குடிக்கலாம். அவற்றின் நன்மைகளை அனுபவிக்க கறிவேப்பிலையை சாதம் மற்றும் சாலட்களில் சேர்க்கவும்.
கறிவேப்பிலை ஆல்பா-அமிலேஸ் எனப்படும் சக்திவாய்ந்த நொதியை வெளியிடுவதாக அறியப்படுகிறது. இது உணவு மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைக்கிறது. எனவே, இது இயற்கையான இரத்த சர்க்கரை சீராக்கியாக செயல்படுகிறது.
அதோடு ஆயுர்வேதத்தின்படி கறிவேப்பிலை, கசப்பு இனிமையை எதிர்த்து நிற்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்தது. இது கசப்பு தன்மையை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சினைகளுக்கும் கறிவேப்பிலை உதவுகிறது.