இலங்கை பொலிஸாருக்கு சவால் விடுத்த எம்.பி மகன்! வெடித்த சர்ச்சை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலீப் வெதஆராச்சியின் புதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய படமொன்றை பதிவேற்றியுள்ளார்.
அதாவது தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, தற்போது பொலிஸாரால் தேடப்பட்டுவருகின்றார். இந்நிலையில் “ஸ்ரீ லங்கா பொலிஸாரே! நான் அவுஸ்திரேலியா வந்துள்ளேன்.
இப்போது என்ன செய்வீர்கள்?” என இலங்கை பொலிஸாருக்கு சவால் விடுக்கும் வகையில் இணையத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
இந்நிலையில் பொலிஸாரினால் தேடப்படும் ஒருவர் பொலிசாருக்கே சவால் விடுத்திருப்பது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை கடந்த சில தினங்களின் முன்பு நாடாளுமன்ற உறுப்பினரான திலீப் வெதஆராச்சியின் புதல்வர் கடமையில் இருந்த பொலிஸாரை கெட்டவார்தைகளால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.