யாழில் பிரபல வர்த்தகரின் மகன் அதிரடி கைது ; இலக்க தகடற்ற காருக்குள் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற பிரபல வர்த்தகரின் மகன் நேற்று (27) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் வழங்க முயற்சி
குறித்த நபர் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கைதிலிருந்து தப்புவதற்காக தமக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.