மாமியாரை தாக்கிய மருமகன்; சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
மருமகனை தாக்க முற்பட்ட வேலை தலையில் பலத்த காயமடைந்த மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
அத்தோடு மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அத்தோடு இத் தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் இன்று (02) காலை இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
கணவனிற்கும் மனைவிக்கும் இடையை வாக்குவாதம்
இன்றையதினம் காலை கணவனிற்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
அது முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடாரி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவி மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.
இதனை தடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.