தாயொருவருக்கு நேர்ந்த துயரம்; மகன், மகள், மருமகள் கைது
தம்பகல்ல பொலிஸ் பிரிவில் வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் மகன், மகள் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் இடபெற்றுள்ளது.
மகன், மகள், மருமகள்
சம்பவத்தில் கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் மண்வெட்டியால் அடித்து பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் 35 வயது மகன், 30 வயது மகள் மற்றும் 34 வயது மருமகள் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.