யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சில காணிகள் கையளிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கட்டளைத்தளபதி மானத ஜெகம்பத், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரிடம், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களைக் கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, வலிவடக்கு, வசாவிளான் பகுதியில் உள்ள 20 ஏக்கர் காணிகளும், மாங்கொல்லை பகுதியில் உள்ள 15 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கற்கோவளம் பகுதியிலுள்ள 5.7 ஏக்கர் காணிகளும் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
வெடிபொருட்கள் அபாயம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் குறித்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.