இரத்த சோகையை கட்டுப்படுத்தும் சில பானங்கள்
இரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் நிலையாகும்.
இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலால் போதுமான ஆக்ஸிஜனை பெற முடியாமல் போகும் ஆக்ஸிஜன் உடலில் குறைவாக இருக்கும் போது அது மிகுந்த உடல் சோர்வு அல்லது பலவீனத்தை உணர வைக்கும்.
இரத்த சோகை வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இரும்புச்சத்து குறைபாடு ஆகும். அதுவும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம், செரிமான பிரச்சனைகள், நாள்பட்ட நோய்கள் மற்றும் பிற நிலைமைகளால் ஒருவருக்கு இரத்த சோகை வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
இரத்த சோகையால் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இரத்த சோகை
இரத்த சோகையை கண்டறிந்து அதற்கு சரியான சிகிச்சையை உடனே மேற்கொள்ளாமல் இருந்தால், அது உடலை மிகவும் மோசமாக பாதித்துவிடும்.
இரத்த சோகையை சரிசெய்ய இரும்புச்சத்தை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் பானங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
முக்கியமாக வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி சத்தானது உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன.
வைட்டமின் சி உடலில் குறைவாக இருந்தால் அது இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கி இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.
கோடையில் குடிக்க வேண்டிய பானங்கள்
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன.
இது இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவி புரிந்து இரத்த சோகையை சரிசெய்ய உதவும்.
அதுவும் கோடையில் ஸ்ட்ராபெர்ரி அதிகம் கிடைக்கும் என்பதால் அந்த பழத்தை வாங்கி அதை அப்படியே சாப்பிடலாம் அல்லது அந்த பழத்தை அரைத்து ஜூஸாக அல்லது ஸ்மூத்தியாக தயாரித்துக் குடிக்கலாம்.
கிவி ஜூஸ்
கிவி மற்றொரு சுவையான மற்றும் வைட்டமின் சி அதிகம் கொண்ட பழம். கிவி பழத்தில் உள்ள ஆக்டினிடின் என்ற நொதி உள்ளது.
அது இரும்புச்சத்தை ஜீரனிக்க உதவி புரிந்து எளிதில் உடலால் உறிஞ்சச் செய்கின்றன. எனவே இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் கிவி பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் வடிவில் உட்கொள்ளலாம்.
இது வைட்டமின் சி-யை கணிசமாக அதிகரிக்கச் செய்து இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடும்.
எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதை அனைவரும் அறிவோம். இது எளிதில் எளிதில் கிடைக்கக்கூடிய பழம்.
எனவே உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் எலுமிச்சை ஜூஸை தினமும் குடித்து வர இது இரும்புச்சத்தை உடலில் அதிகரித்து இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவும்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன இது இரும்புச்சத்தை உடலில் உறிஞ்ச உதவி புரிந்து இரத்த சோகையை சரிசெய்யும்.
ஒரு கப் ஆரஞ்சு ஜூஸில் 124 மிகி வைட்டமின் சி உள்ளன. இது தினசரி தேவையை விட அதிகமானது.
ஆகவே இரும்புச்சத்து குறைபாட்டைக் கொண்டவர்கள் ஆரஞ்சு ஜூஸை தினமும் குடித்து வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதை அனைவருமே அறிவோம். நெல்லிக்காயை தினசரி உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு இரும்புச்சத்தையும் அதிகமாக உறிஞ்ச உதவி புரிந்து இரத்த சோகையில் இருந்து விடுபட உதவும்.
அன்னாசி ஜூஸ்
அன்னாசியில் புரோமிலைன் என்னும் நொதிப் பொருள் உள்ளது. இது செரிமானத்தை சீராக்குவதோடு, இரும்புச்சத்து உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.
எனவே இரும்புச்சத்து குறைபாட்டினால் அவதிப்படுபவர்கள், அன்னாசி பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் வடிவில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வர இரும்புச்சத்தின் அளவு உடலில் அதிகரித்து இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.