இளநீர் தீபத்தை ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீருமாம்
கடன் பிரச்சினை அளவில் மாறினாலும் அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் இருக்கத்தான் செய்கிறது.
இந்தநிலையில் எப்படிப்பட்ட கடன் சுமையாக இருந்தாலும், அந்த கடனை தீர்ப்பதற்கு நாம் செய்யக்கூடிய பரிகாரம்தான் இளநீர் தீபம்.
ஒரே ஒரு முறை தம் வீட்டில் இந்த இளநீர் தீபத்தை ஏற்றி வழிபட்டால் நம்முடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு நாம் எந்த மந்திரத்தையும் கூற வேண்டும், எந்த வழிபாட்டு முறையும் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதை வைத்து ஒரு தீபத்தை ஏற்றினாலே கடன் இல்லாத வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.
இளநீர் பரிகாரம்
முற்றாத இளநீர் ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும். வாங்கும் பொழுதே இளநீரை சீவி வாங்கிக் கொள்ளலாம்.
வீட்டிற்கு வந்து பூஜை அறையில் ஒரு தாம்பாளத்தை வைக்க வேண்டும். அதன் நடுவில் பச்சரிசியை கொட்டி கொள்ள வேண்டும்.
இப்பொழுது வாங்கி வந்த இளநீரை மேலே சீவி அதில் இருக்கும் நீரில் சிறிதளவு வெளியில் ஊற்றிவிட்டு, அரிசியின் மேல் இந்த இளநீர் ஆடாதவாறு வைக்க வேண்டும்.
பின் நவதானியத்தை வாங்கி வந்து இளநீரில் போட வேண்டும். பிறகு அந்த ஓட்டையை வெற்றிலையை வைத்து மூட வேண்டும்.
வெற்றிலையின் மேல் அகல் விளக்கு
வெற்றிலையின் மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
காலையும், மாலையும் ஒரு மணி நேரம் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
மறுநாள் அந்த அகலில் இருக்கும் எண்ணெயையும் திரியையும் மாற்றிவிட்டு புதிதாக எண்ணெயையும் திரியையும் போட்டு ஏற்ற வேண்டும்.
இவ்வாறு நாம் தொடர்ந்து 7 நாட்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் எண்ணெயையும், திரியையும் மாற்ற வேண்டும்.
8வது நாள் இளநீரை இரண்டாக வெட்ட வேண்டும். இளநீரில் இருக்கும் நவதானியங்கள் முளைவிட்டு இருக்கும்.
அந்த தானியங்களை எடுத்து ஒரு பேப்பரில் போட்டு வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
காய்ந்த நவதானியங்கள்
காய்ந்த நவதானியங்களை பொடியாக அரைத்து ஒரு வெள்ளை நிற துணியிலோ அல்லது மஞ்சள் நிற துணியிலோ மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த மூட்டையை நம் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம் அல்லது பணம் இருக்கும் இடங்களில் வைக்கலாம் அல்லது பீரோவில் வைக்கலாம்.
இந்த பரிகாரத்தை நாம் ஒரே ஒரு முறை செய்தால் போதும் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து, கடன் இல்லாத வாழ்க்கையை நம்மால் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
6 மாதங்கள் கழித்து அந்த மூட்டையை கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும்.